விஜய் படங்களுக்கு மட்டும் விருதுகள் கிடைக்காதது ஏன்? ரசிகர்கள் ஆதங்கம்

  • IndiaGlitz, [Tuesday,March 23 2021]

விஜய் படங்களுக்கு மட்டும் விருதுகள் கிடைக்காமல் இருப்பது ஏன்? என அவரது ரசிகர்கள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நேற்று 67 வது தேசிய விருதுகள் அறிவித்த நிலையில் பல தமிழ்ப்படங்கள் விருதுகளை அள்ளின. குறிப்பாக அசுரன், ஒத்த செருப்பு, சூப்பர் டீலக்ஸ், விசுவாசம் ஆகிய படங்களில் பணிபுரிந்தவர்களுக்கு விருதுகள் கிடைத்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் விஜய்யின் படங்களுக்கு மட்டும் விருதுகள் கிடைக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆதங்கத்துடன் பதிவு செய்து வருகின்றனர். 20119 ஆம் ஆண்டு வெளியான ’பிகில்’ திரைப்படம் பெண்களின் முன்னேற்றத்திற்கான படம் என்றும் அந்த படத்தை பார்த்த பல பெண்கள் தன்னம்பிக்கை அடைந்து இருக்கிறார்கள் என்றும் அப்படிப்பட்ட ஒரு படத்திற்கு விருது கிடைக்காதது ஏன் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேபோல் கத்தி, சர்கார் போன்ற படங்களும் விருதுக்கு தகுதியான படங்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விஜய் ரசிகர்களின் இந்த கேள்விக்கு நெட்டிசன்களே பதிலும் அழைத்துள்ளனர். விஜய் தனது படங்களில் அரசுக்கு எதிரான கருத்துக்களையும் வசனங்களை வைத்திருப்பதால் தான் அவரது படங்கள் விருதுகளுக்கான பரிசீலனையில் கூட இடம்பெறுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும், இரண்டு கட்சிகளுமே விஜய்க்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருகின்றன என்றும், இதே போல் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசும் விஜய்க்கு எதிராகவே இருக்கின்றது என்றும், இதனால் தான் விஜய்யின் படங்கள் விருதுகள் பெறுவதில்லை என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். விஜய் ரசிகர்களின் ஆதங்கம் மற்றும் நெட்டிசன்களின் கருத்து குறித்து கமெண்ட்ஸ் பகுதியில் உங்கள் கருத்தை தெரிவிக்கலாம்.

விஜய் படங்களுக்கு விருதுகள் கிடைக்கவில்லை என்றாலும் அவர் படங்கள் செய்த வசூல் சாதனையை யாராலும் செய்ய முடியாது என்பதும்,, ரசிகர்களின் மனதில் குடியிருப்பதே விஜய்க்கு கிடைத்த மிகப்பெரிய விருது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

எனக்கு ரூ.300 கோடி இழப்பு: கமல்ஹாசன் அதிர்ச்சி தகவல்

உலகநாயகன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனக்கு 300 கோடி ரூபாய் இழப்பு என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சிவகார்த்திகேயன் தோற்றத்தில் திடீர் மாற்றம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரை தான் நடித்த படங்களில் தனது உயரத்திற்கு ஏற்ற எடையுடன் இருந்த தான் இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே

ஆட்டோவில் மரணம் அடைந்த 'காதல்' பட நடிகர்!

பரத், சந்தியா நடிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கிய 'காதல்' திரைப்படம் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார் நடிகர் விருச்சியகாந்த்.

45 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி… மத்திய அரசு அதிரடி!

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது.

வெற்றிமாறனுக்கு கலைப்புலி தாணு செய்த கெளரவம்!

46 ஆவது தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் 'அசுரன்' படத்திற்கு மூன்று விருதுகள் கிடைத்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம். 'அசுரன்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான