ஒருவிரல் புரட்சி: நிஜத்தில் நடக்கும் நீக்கப்பட்ட காட்சிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் சில காட்சிகள் ஆளும் அதிமுக அரசை விமர்சிப்பது போல் இருந்ததாக எதிர்ப்பு கிளம்பியதால் சர்ச்சைக்குரிய சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசின் இல்வச பொரூட்களை தீயில் இட்டு எரிக்கும் காட்சி நீக்கப்பட்டது.
ஆனால் படத்தில் நீக்கப்பட்ட இந்த காட்சி தமிழகத்தின் சில பகுதிகள் உண்மையாக நடந்து வருகிறது. ஆம், விஜய் ரசிகர்கள் வீட்டிலும் அரசு கொடுத்த இலவச பொருட்கள் இருக்கின்றன என்று அமைச்சர் ஒருவர் கூறியதை அடுத்து, விஜய் ரசிகர்கள் பலர் கொதிப்படைந்து தங்களின் வீடுகளில் உள்ள அரசு கொடுத்த விலையில்லா பொருட்களான லேப் டாப்கள், மிக்சிக்கள் போன்றவற்றை தீயிட்டு எரித்தும், உடைத்தும் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
இலவச பொருட்களை அரசு கொடுத்தாலும் அமைச்சர்கள் யாரும் அவர்களுடைய சொந்த பணத்தில் இருந்து இந்த பொருட்களை கொடுக்கவில்லை. மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் இந்த பொருட்களை வாங்கி கொடுத்துள்ளனர். எனவே அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக எண்ணி, மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய பொருட்களை வீணாக்க வேண்டாம் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
ஒருவேளை அரசின் இலவச பொருட்களை நீங்கள் வெறுத்தே ஆகவேண்டுமானால் அந்த பொருட்களை உடைக்காமல் ஏழை எளியவர்களுக்காவது கொடுத்து உதவலாம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com