'விக்ரம்' ஆடியோ விழாவில் விஜய் ரசிகர்களுக்கு இரட்டை சப்ரைஸ்!

கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ள நிலையில் இந்த விழாவில் விஜய் ரசிகர்களுக்கு இரட்டை சர்ப்ரைஸ் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

’விக்ரம்’ ஆடியோ விழாவில் கலந்து கொள்ளுமாறு ரஜினிகாந்த், விஜய், சூர்யா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் டிவி டிடி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

’பத்தல பத்தல, அவரை எவ்வளவு நேரம் பார்த்தாலும் பத்தல, ஒவ்வொரு முறையும் கமல் அவர்களை பார்க்கும் போது ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்கிறேன். விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அனிருத் ஆகியோர்களை இன்று நான் பார்க்க போகிறேன். இன்று மாலை நேரத்தில் உங்களை சந்திக்கிறேன்’ என குறிப்பிட்டு இதில் தளபதி விஜய் என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார். இதனை அடுத்து விஜய் இந்த விழாவில் கலந்து கொள்வதை அவர் மறைமுகமாக உறுதி செய்துள்ளதாகவே கருதப்படுகிறது.

மேலும் இன்றைய நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்வதே விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் என்றால், ‘விக்ரம்’ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் அறிவிப்பையும் இன்றைய விழாவில் அவர் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் விஜய் ரசிகர்களுக்கு இரட்டை சர்ப்ரைஸ் இருப்பதாகவே படுகிறது.