முக்கியமான சீனை கட் பண்ணிட்டாங்களே.. டிவியில் 'லியோ' பார்த்த ரசிகர்கள் அதிருப்தி..!

  • IndiaGlitz, [Tuesday,January 16 2024]

நேற்று சன் டிவியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ‘லியோ’ திரைப்படம் ஒளிபரப்பான நிலையில் அந்த படத்தில் உள்ள முக்கியமான காட்சியை கட் செய்துவிட்டார்கள் என விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘லியோ’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆயுத பூஜை விருந்தாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று பொங்கல் திருநாளில் சன் டிவியில் ‘லியோ’ திரைப்படம் ஒளிபரப்பாகிய நிலையில் ஏராளமான ரசிகர்கள் ஆர்வத்துடன் இந்த படத்தை பார்த்தனர். இந்த படத்தில் விஜய் மற்றும் த்ரிஷா இடையே உள்ள லிப்லாக் காட்சியை சன் டிவி கட் செய்துவிட்டது என்று ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

முக்கியமான சீனை கட் செய்து விட்டார்களா என ரசிகர்கள் அதிருப்தி அடைந்தாலும் வீட்டில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் இந்த படத்தை பார்ப்பார்கள் என்பதால் தர்ம சங்கடம் ஏற்படக்கூடாது என்பதற்காக கட் செய்து இருப்பார்கள் என்று ஆறுதல் அடைந்து வருகின்றனர்.