எத்தனை பிரச்சனை இருந்தாலும் ரசிகர்களை பார்த்ததும் புன்னகைக்கும் தளபதி: ரசிகர்கள் நெகிழ்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில ஆண்டுகளில் விஜய் மற்றும் விஜய்யின் படங்கள் சந்தித்த பிரச்சனைகளை போல் வேறு எந்த நடிகரோ அல்லது அவரது படங்களுக்கோ இருந்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. எந்த ஆட்சி இருந்தாலும் அந்த ஆட்சியில் விஜய் படங்களுக்கு நெருக்கடிகள் கொடுப்பது என்பது தொடர்ந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த வருமான வரி சோதனை, ‘மாஸ்டர் படப்பிடிப்புக்கு எதிராக நடந்த போராட்டம் ஆகிய பிரச்சனைகளையும் தாண்டி ரசிகர்களை பார்த்தவுடன் தளபதி செய்த புன்னகை தங்களுக்கு நெகிழ்ச்சியாக இருந்ததாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
’மாஸ்டர்’ படத்தின் நேற்றைய படப்பிடிப்பு முடிந்தவுடன் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியே வந்த விஜய் ரசிகர்களை பார்த்து புன்னகையுடன் கையசைத்தார். இதை பார்த்து ரசிகர்கள் மிகுந்த நிகழ்ச்சி அடைந்தார்கள். எத்தனை பிரச்சனை நடந்தாலும், முகத்துல ஒரு சின்ன கஷ்டத்த கூட காட்டாம புன்னகைய மட்டும் காட்டுறாரு பாரு என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.
????????5th tym paathutan thalapathy @actorvijay ah ,santhoshathuku eedu inaiye illa ???????????? luvv u anna?????????????? #Master #விஜயால்_ஸ்தம்பித்த_நெய்வேலி pic.twitter.com/VuBYX2nYeE
— ❤Romantic boy?? ᴹᵃˢᵗᵉʳ (@itz_Surya_vj) February 8, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments