close
Choose your channels

இன்னும் ஒரே ஒரு படம் தான்.. விஜய் அறிவிப்பு குறித்து ரசிகர்களின் ரியாக்சன் என்ன?

Friday, February 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் இன்னும் ஒரே ஒரு படம் தான் நடிப்பேன் என்றும் அதன் பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் கூறியிருப்பதை அடுத்து அவரது ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

சற்றுமுன் தளபதி விஜய் தனது அரசியல் கட்சி பெயரை தமிழக வெற்றி கழகம் என்று அறிவித்ததோடு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார் என்பதையும் பார்த்தோம். அந்த அறிக்கையின் கடைசியில் ’என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன். என தெரிவித்திருந்தார்.

இதிலிருந்து அவர் இன்னும் ஒரே ஒரு படம் மட்டுமே நடிப்பார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும்போது ’தளபதி விஜய் சினிமாவில் நடிக்காவிட்டாலும் பரவாயில்லை, அவரை நாங்கள் ஒரு தலைவராக பார்க்க விரும்புகிறோம்’ என்று கூறி வருகின்றனர்.

தளபதி விஜய் கிட்டத்தட்ட அனைத்து கேரக்டர்களிலும் நடித்து முடித்து விட்டார், எனவே அவர் அடுத்த கட்டத்திற்கு செல்வதை தான் நாங்கள் விரும்புகிறோம், 70 வயது வரை நடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே அவர் சினிமாவுக்கு முழுக்கு போட்டதை வருத்தத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

மொத்தத்தில் விஜய் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலுக்கு வருவதை அவரது ரசிகர்கள் பாசிட்டிவாக தான் பார்க்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment