ஏ.ஆர்.ரஹ்மான், சச்சினை துணைக்கு அழைத்த விஜய் ரசிகர்கள்: மீண்டும் வைரலாகும் போஸ்டர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் மூலம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக எம்ஜிஆர் போன்று விஜய்யை உருவகப்படுத்திய போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
எம்ஜிஆர் நடித்த உரிமைகுரல், மதுரை மீட்ட சுந்தரபாண்டியன், எங்க வீட்டுப்பிள்ளை, போன்ற படங்களின் போஸ்டர் போலவே விஜய் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததும், அதிலுள்ள வாசகங்களும் ஆளும் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் நேற்று தேனி பகுதியில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதாகவும், போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் மதுரையில் தற்போது சச்சின் மற்றும் ஏஆர் ரகுமான் ஆகியோருடன் இணைந்து விஜய் நிற்பது போன்ற போஸ்டர்களை ஒட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல சதியால் நடந்தது இவங்களுக்கு ஏற்பட்ட GAME
சரி விடுங்க அதுனால தான் இவங்க வேர்ல்ட் புல்லா NAME
என்ற வாசகங்களுடன் கூடிய போஸ்டர் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. இந்த போஸ்டரில் விஜய்யுடன் ஏஆர் ரகுமான் மற்றும் சச்சின் தெண்டுல்கர் ஆகியோர்களும் உள்ளனர். பாலிவுட் திரையுலகில் தனக்கு அவமதிப்பு நடந்ததாக சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் கூறி இருந்தார். அதேபோல் சச்சின் டெண்டுல்கரும் பல்வேறு அவமதிப்புகளை சந்தித்ததாக கூறப்பட்டது. இதனை மனதில் வைத்து சச்சின் மற்றும் ஏஆர் ரஹ்மானுடன் இணைந்து விஜய் ரசிகர்கள் வடிவமைத்து ஒட்டியுள்ள இந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments