close
Choose your channels

விஜய் ரசிகர்களின் ரிங்-டோனாக மாறுமா 'அதரவைப்போம்' பாடல்கள்?

Thursday, March 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய்யின் தீவிர ரசிகர்கரும், விஜய் இளைஞர் மன்றத்தின் முன்னாள் நிர்வாகியுமான ஜான் விக்னா என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து 'அதரவைப்போம்' என்ற படத்தினை இயக்கி வருகிறார் என்ற செய்தியினை ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பார்த்தோம்.


இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படம் ஏப்ரலில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் ஞாயிறு அன்று அதாவது மார்ச் 13ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் படங்களை தொடர்ந்து கோவையில் ரிலீஸ் செய்யும் காஸ்மோ சிவா அவர்களின் நல்லாசியுடன் இந்த விழா கோவையில் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இசை வெளியீடு விழாவுடன் இந்த படத்தின் ஒன்றரை நிமிட டிரைலரும் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'நாங்க இளையதளபதி ஃபேன்ஸ்' என்ற பாடல் பெரும் வரவேற்பை பெறும் என்றும், பாடல் வெளியீட்டிற்கு பின்னர் இந்த பாடல் இளையதளபதி ரசிகர்களின் ரிங்டோனாக மாறும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

+1 படிக்கும் மாணவரான ராகுல் இந்த படத்தின் நாயகனாகவும், தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் ஐஸ்வர்யா இந்த படத்தின் நாயகியாகவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஹீரோ இளையதளபதியின் தீவிர ரசிகராக நடிக்கின்றார் என்பதை சொல்ல தேவையில்லை.

இவர்களுடன் விஜய் ரசிகர் மன்றத்தின் உறுப்பினர்கள் உன்னிகிருஷ்ணன், மணிபாய் மற்றும் ரஞ்சித் ஆகியோர்களும், கே.பாக்யராஜ், பட்டிமன்றம் ராஜா, போஸ் வெங்கட், சோனியா மற்றும் பலரும் நடிக்கின்றனர்.

லியோ விமலநாதன் ஸ்டாலின் மற்றும் ஸ்டாலின் இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment