தூய்மை பணியாளர்களுக்கு விஜய் ரசிகர்கள் செய்த மகத்தான உதவி

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் கொடூரமாக பரவி வரும் நிலையில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தூய்மை பணிகளில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களின் மதிப்பு பலருக்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து தூய்மை பணியாளர்களுக்கு மரியாதையும் நிதி உதவியும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கோவையில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு மாஸ்க்குகள், கையுறைகள் மட்டுமின்றி அவர்களின் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு உட்பட பல்வேறு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி பொருட்களை கோவை விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கி உதவி செய்தனர்.

மேலும் கோவை சிஎம்சி காலனியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரங்களையும் வழங்கி, சுகாதாரமற்று இருக்கும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும்படி கேட்டுக்கொண்டதாக விஜய் மக்கள் இயக்கம் கோவை மாவட்ட பொறுப்பாளர் சம்பத்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். மக்களின் நலன் காக்க தங்கள் உயிரையும் பணயம் வைத்துப் பணி செய்து வரும் தூய்மைப் பணியாளர்களின் நலன்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

More News

பிரபல தயாரிப்பாளரின் மகளுக்கு கொரோனா பாசிட்டிவ்: தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி என்பவர் ஷாருக்கான் நடித்த 'சென்னை எக்ஸ்பிரஸ்' 'தில்வாலே' 'ஹாப்பி நியூ இயர்' 'ரா ஒன்' உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார்.

கொரோனா தாக்கி இருக்குமா என்ற பயத்தில் தற்கொலை செய்த பெண்: பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் பஞ்சாபை சேர்ந்த 60 வயது பெண் ஒருவர் தனக்கு தொண்டை வலி இருந்ததால் கொரோனா வைரஸ்

3 டாக்டர்கள், 26 நர்ஸ்களுக்கு கொரோனா பாதிப்பு: மூடப்பட்டது பிரபல மருத்துவமனை

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கொரோனா விடுமுறையில் பால் கறக்க கற்று கொண்ட 'மாஸ்டர்' நடிகர்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகரும் தொலைக்காட்சி பிரபலமுமான தீனா,

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு விஜய்காந்த் செய்த மிகப்பெரிய உதவி

இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களும் கொரோனாவால் திண்டாடி வரும் நிலையில் அரசின் நடவடிக்கைக்கு உதவி செய்யும் வகையில் திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் கோடிக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும்