பெப்சி தொழிலாளர்களுக்கு கைகொடுத்த விஜய் ரசிகர்கள்

கொரோனா வைரஸ் காரணமாக தமிழ் திரையுலகமே முடங்கி இருக்கும் நிலையில், தின வேலை செய்யும் சினிமா தொழிலாளர்கள் வேலையின்றி வருமானமின்றி பசியும் பட்டினியுமாக குடும்பத்துடன் இருக்கின்றார்கள். இது குறித்து ஒரு நீண்ட கோரிக்கை அறிக்கை ஒன்றை சற்று முன்னர் பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி அவர்கள் விடுத்திருந்தார்

அதில் நடிகர் நடிகைகள் உள்பட சினிமா பிரபலங்கள் அனைவரும் பெப்சி தொழிலாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தார். பணம் அல்லது அரிசியாக கூட கொடுத்தால் பெப்சி தொழிலாளர்களின் உயிரை ஒரு சில நாட்கள் காப்பாற்றலாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்

இந்த கோரிக்கை விடுத்த அடுத்த சில நிமிடங்களிலேயே ரூபாய் 10 லட்சம் ரூபாய் வழங்குவதாக நடிகர் சூர்யா குடும்பத்தினர் அறிவித்தனர். இதனை அடுத்து ஒருசில நடிகர் நடிகைகள் தொடர்ந்து நிதி உதவி மற்றும் பொருளுதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி அவர்களின் வேண்டுகோளை ஏற்று சேலம் மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் 10 மூட்டை அரிசியை வடபழனியில் உள்ள பெப்சி அலுவலகத்தில் வழங்கினார்கள். இதேபோல் மற்ற நடிகர்களின் ரசிகர்களும் பெப்சி தொழிலாளர்களுக்காக வழங்க வேண்டும் என்பதே அனைத்து தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது