கேரள வெள்ளம்: உடனடியாக களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
புயல், கனமழை, வெள்ளம் என இயற்கை பேரிடர்கள் வரும்போதெல்லாம் சினிமா ரசிகர்கள் களத்தில் இறங்கி நிவாரணப்பணிகள் செய்து வருவது தெரிந்ததே. சென்னை வெள்ளம், டெல்டா பகுதியில் ஏற்பட்ட புயல் ஆகியவைகளின் போது அஜித், விஜய் உள்பட பல்வேறு நடிகர்களின் ரசிகர்கள் களத்தில் இறங்கி நிவாரணப்பணிகள் செய்தனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு கேரள மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது தளபதி விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் மூலம் நிவாரண பணிக்கு பேருதவி செய்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் கேரள மாநிலம் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் கொல்லத்தில் உள்ள விஜய் ரசிகரகள் ஒரு வேனில் அந்த பகுதி மக்களுக்கு தேவையான உணவு உள்பட அத்தியாவசிய பொருட்களை எடுத்து சென்று வழங்கி வருகின்றனர்.
இதேபோல் இன்னும் பல பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜய் ரசிகர்கள் சென்று நிவாரண பொருட்களை வழங்கவுள்ளனர். விஜய் ரசிகர்களை அடுத்து மற்ற மாஸ் நடிகர்களின் ரசிகர்களும் களத்தில் இறங்கி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது
Vidhya Association (Kollam) Thalapathy @Actorvijay Fans Collects and Hand over Flood Relief Materials To people who affected by flood in Kerala. #KeralaFloods #KeralaFloodReliefThalapathy pic.twitter.com/87SnJYfZP7
— Vijaysm ™ (@Vijaysm_Kerala) August 10, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments