கேரள வெள்ளம்: உடனடியாக களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Saturday,August 10 2019]

புயல், கனமழை, வெள்ளம் என இயற்கை பேரிடர்கள் வரும்போதெல்லாம் சினிமா ரசிகர்கள் களத்தில் இறங்கி நிவாரணப்பணிகள் செய்து வருவது தெரிந்ததே. சென்னை வெள்ளம், டெல்டா பகுதியில் ஏற்பட்ட புயல் ஆகியவைகளின் போது அஜித், விஜய் உள்பட பல்வேறு நடிகர்களின் ரசிகர்கள் களத்தில் இறங்கி நிவாரணப்பணிகள் செய்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கேரள மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது தளபதி விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் மூலம் நிவாரண பணிக்கு பேருதவி செய்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் கேரள மாநிலம் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் கொல்லத்தில் உள்ள விஜய் ரசிகரகள் ஒரு வேனில் அந்த பகுதி மக்களுக்கு தேவையான உணவு உள்பட அத்தியாவசிய பொருட்களை எடுத்து சென்று வழங்கி வருகின்றனர்.

இதேபோல் இன்னும் பல பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜய் ரசிகர்கள் சென்று நிவாரண பொருட்களை வழங்கவுள்ளனர். விஜய் ரசிகர்களை அடுத்து மற்ற மாஸ் நடிகர்களின் ரசிகர்களும் களத்தில் இறங்கி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது
 

More News

இணையத்தில் வைரலாகும் ரகுல் ப்ரீத்திசிங் லிப்கிஸ் வீடியோ

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா, ரகுல் ப்ரீத்திசிங் நடித்த 'மன்மதுடு 2' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு பெரும்பாலான விமர்சகர்கள் மற்றும்  ஊடகங்கள் நெகட்டிவ் விமர்சனங்களை

ஜிவி பிரகாஷின் அடுத்த பட இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே சர்வம் தாளமயம்', 'குப்பத்து ராஜா', 'வாட்ச்மேன்' ஆகிய திரைப்படங்கள் வெளிவந்துள்ளது.

'இந்தியன் 2' படத்தின் வில்லனாகும் பிரபல தமிழ் ஹீரோ

கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'இந்தியன் 2' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கவுள்ளது.

'நடிகையர் திலகம்' கீர்த்திசுரேஷூக்கு தேசிய விருது! திரையுலகினர் வாழ்த்து

'நடிகையர் திலகம்' திரைப்படத்தில் சிறப்பாக நடித்த நடிகை கீர்த்தி சுரேஷூக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது

வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் வெற்றி

வேலூர் மக்களவை தொகுதிக்கு கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வந்தன.