காவல்துறைக்கு விஜய் ரசிகர்கள் செய்த உதவி: நன்றி கூறிய துணை கமிஷனர்
- IndiaGlitz, [Sunday,March 29 2020]
தமிழகத்திலும் சரி, நமது அண்டை மாநிலங்களாக இருந்தாலும் சரி, இயற்கை பேரிடர் நேரிடும் போதெல்லாம் முதல் ஆளாக களத்தில் இறங்கி சமூக சேவை செய்து வருபவர்கள் தளபதி விஜய்யின் ரசிகர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸ் தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கிருமிநாசினி, முக கவசம் உள்ளிட்ட பல பொருட்களை பொதுமக்களுக்கு கொடுத்து தளபதி விஜய் ரசிகர்கள் ஆங்காங்கே உதவி செய்து வருகின்றனர் என்ற செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு காலத்தில் கடமையாற்றும் காவலர்களுக்காக திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 250 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள், 250 மாஸ்க் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் ஆகியவற்றை வழங்கியுள்ளனர்.
இதனை அடுத்து நெல்லை துணை கமிஷனர் அர்ஜுன் சரவணன் அவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு மாநகர காவல் துறை சார்பாக நன்றி தெரிவித்துள்ளார். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா வைரஸ் மக்களுக்கு பரவாமல் இருக்க இரவுபகலாக பணி செய்து வரும் காவலர்களுக்கு விஜய் ரசிகர்கள் செய்த உதவியை மிகப்பெரியதாக கருதப்படுகின்றது.
ஊரடங்கு காலத்தில் கடமையாற்றும் காவலர்களுக்காக திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 250 சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் ,250 மாஸ்க் ,பிஸ்கட் பாக்கட் வழங்கினர்.
— Arjun Saravanan (@ArjunSaravanan5) March 28, 2020
மாநகர காவல்துறை சார்பாக நன்றி.#Staysafeathome pic.twitter.com/SsCF0KGVkh