ஒரு பக்கம் வன்முறை இன்னொரு பக்கம் விதைப்பந்துகள்: விஜய் ரசிகர்களின் மாறுபட்ட குணங்கள் 

  • IndiaGlitz, [Friday,October 25 2019]

விஜய் நடித்த பிகில் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் முதல் நாள் முதல் காட்சியை பல விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக பார்த்து ரசித்தனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு திரையரங்கில் பிகில் திரைப்படம் அதிகாலை காட்சி திரையிடப்படவில்லை என்பதால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் 30 விஜய் ரசிகர்களை கைது செய்துள்ளனர்

இந்த நிலையில் ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் வன்முறையில் இறங்கினாலும், இன்னொரு பக்கம் ஆக்கபூர்வமான ஒரு விஷயத்தை செய்துள்ளனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள் ஒரு திரையரங்கில் பிகில் திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தவர்களுக்கு விஜய் ரசிகர் மன்றங்கள் சார்பில் இலவச விதைப்பந்துகள் வழங்கப்பட்டுள்ளன. பேனருக்கு பதில் விதைப்பந்துகள் இலவசமாக வழங்கப்பட்டதாகவும் மொத்தம் 2000 விதைப்பந்துகள் வழங்கியதாகவும் விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

More News

பாலியல் புகார் கூறிய பள்ளி மாணவி உயிரோடு எரிப்பு: 16 பேர்களுக்கு தூக்கு

தலைமை ஆசிரியர் மீது பாலியல் புகார் கூறிய பள்ளி மாணவி ஒருவர் உயிரோடு எரிக்கப்பட்டதையடுத்து இந்த குற்றத்தை செய்த 16 பேருக்கு தூக்கு தண்டனையை நீதிமன்றம் அளித்துள்ளது

விஜய் ரசிகர்களின் ரகளை குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து

கிருஷ்ணகிரியில் விஜய் ரசிகர்கள் ஆர்வக் கோளாறால் ரகளையில் ஈடுபட்டதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பிகில் சிறப்புக்காட்சி விவகாரம்: 30 விஜய் ரசிகர்கள் கைது

விஜய் நடித்த பிகில் திரைப்படம் இன்று பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில்

பிகில் சிறப்பு காட்சி குறித்த தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் வெளியாக இருப்பதால் விஜய் ரசிகர்கள் தியேட்டர் முன் இப்போதே குவிந்துள்ளனர்.

கைதி படத்தின் ரன்னிங் டைம் மற்றும் முக்கிய தகவல்கள்

நாளை தீபாவளி விருந்தாக விஜய் நடித்த பிகில் படத்துடன் வெளியாகும் ஒரே படம் கார்த்தி நடித்த கைதி. கைதி திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு சில மணி நேரங்களே இருக்கும் நிலையில்