ஒரு பக்கம் வன்முறை இன்னொரு பக்கம் விதைப்பந்துகள்: விஜய் ரசிகர்களின் மாறுபட்ட குணங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த பிகில் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் முதல் நாள் முதல் காட்சியை பல விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக பார்த்து ரசித்தனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு திரையரங்கில் பிகில் திரைப்படம் அதிகாலை காட்சி திரையிடப்படவில்லை என்பதால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் 30 விஜய் ரசிகர்களை கைது செய்துள்ளனர்
இந்த நிலையில் ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் வன்முறையில் இறங்கினாலும், இன்னொரு பக்கம் ஆக்கபூர்வமான ஒரு விஷயத்தை செய்துள்ளனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள் ஒரு திரையரங்கில் பிகில் திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தவர்களுக்கு விஜய் ரசிகர் மன்றங்கள் சார்பில் இலவச விதைப்பந்துகள் வழங்கப்பட்டுள்ளன. பேனருக்கு பதில் விதைப்பந்துகள் இலவசமாக வழங்கப்பட்டதாகவும் மொத்தம் 2000 விதைப்பந்துகள் வழங்கியதாகவும் விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com