கொரோனா எதிரொலி: மாஸ்க் வழங்கி மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்!
- IndiaGlitz, [Friday,March 20 2020]
எப்பொழுதெல்லாம் இயற்கை பேரிடர் நேரிடுகிறதோ, அப்பொழுதெல்லாம் தளபதி விஜய்யின் ரசிகர்கள் முதல் ஆளாக வந்து சமூக சேவை செய்து வருவார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் தற்போது தமிழகமெங்கும் கொரோனா வைரஸ் பீதியில் இருக்கும் நிலையில் இப்போதும் விஜய் ரசிகர்கள் களத்தில் இறங்கி பொது சேவை செய்து வருகின்றனர். சோழிங்கநல்லூர் பகுதி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த தளபதி விஜய் ரசிகர்கள் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்
மேலும் இலவசமாக மாஸ்க் வழங்குதல் மற்றும் நில நீர் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு மாஸ்க்குகளை பெற்றுச்சென்றனர். நிலவேம்பு குடிநீர் என்பது கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தாது என்றாலும் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் என்பதால் இந்த நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் மாஸ் காட்டி வரும் தளபதி விஜய்யின் ரசிகர்கள் செய்து வரும் இந்த சேவையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மற்ற நடிகர்களின் ரசிகர்களும் இதேபோல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டுள்ளது.