கிழிக்கப்பட்ட 'சர்கார்' பேனர்கள்: விஜய் ரசிகர்கள் செய்த உருப்படியான காரியம்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி இரண்டே நாட்களில் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் சாதனையை செய்தது. ஆனால் மூன்றாவது நாள் முதல் அதிமுகவினர் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் செய்ததால் பல திரையரங்குகளில் இந்த படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் வசூல் குறைந்தது.
அதுமட்டுமின்றி விஜய் ரசிகர்கள் வைத்திருந்த கட் அவுட்டுக்கள், பேனர்கள் ஆகியவை கிழிக்கப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் வருத்தம் அடைந்தாலும் கிழிந்த பேனர்களின் துணிகளை சேகரித்து தெருவோரம் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு கொடுத்து உதவி செய்து வருகின்றனர். இந்த பேனர் துணிகளை பெற்ற வியாபாரிகள் விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
விஜய்க்கு வைத்த பேனர்கள் கிழிக்கப்பட்டுவிட்டதே என்ற சோகத்தில் மூழ்காமல், அந்த பேனர்களையும் ஏழை, எளியவர்களுக்கு கொடுத்து உதவி செய்யும் விஜய் ரசிகர்களின் மனப்பான்மையை நெட்டிசன்கள் பாராட்டு வருகின்றனர். மேலும் 'சர்கார்' திரையிடப்பட்ட திரையரங்குகளில் மட்டும் தோன்றிய பேனர்கள் இனி ஒவ்வொரு தெருவில் உள்ள கடைகளிலும் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக அடிமைங்க கிழிச்ச சர்கார் பேனர ரோட்டோரம் கஷ்டபடுற வியாபரிகளுக்கு கோடுத்து உதவிய தளபதி ரசிகர்கள். தளபதி மட்டும் இல்லைங்க அவர் ரசிகர்களும் பிறருக்கு முன் உதாரணமா இருப்பாங்க. #SarkarPuratchiArambam pic.twitter.com/FV5rafYwiA
— Saran Kavalan (@SaranKavalan) November 9, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com