போலீசார்களுக்கு பிரியாணி விருந்து வைத்த விஜய் ரசிகர்கள்: குவியும் பாராட்டுக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும், அந்த ஊரடங்கு உத்தரவை மக்கள் சரியாக கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக காவல்துறையினர் இரவு பகலாக பணி செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. மக்களின் உயிரை கொரோனாவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக காவல்துறையினர் சாப்பாடு தண்ணீரை கூட பொருட்படுத்தாமல் சேவை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் போலீசாருக்கு அவ்வப்போது பொதுமக்களும் மாஸ் நடிகர்களின் ரசிகர்களும் உதவி செய்து வருகின்றனர் என்பதை பார்த்தோம். குறிப்பாக தளபதி விஜயின் ரசிகர்கள் ஏற்கனவே நெல்லை மாவட்ட போலீசாருக்கு வாட்டர் பாட்டில், பிஸ்கட் ஆகியவற்றை கொடுத்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் புதுக்கோட்டையை பகுதியை சேர்ந்த தளபதி விஜய் ரசிகர்கள் அப்பகுதி போலீசாருக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்தியுள்ளனர்.
24 மணி நேரமும் பொது மக்களை காக்கும் பணியில் சேவையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு ஒருவேளை பிரியாணி விருந்து வைக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டதாக தளபதி விஜய் ரசிகர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் பர்வேஸ் அவர்கள் கூறியதாவது: கொடூரமான கொரோனாவைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்தாலும், கொரோனாவை ஒழிக்கும் போராட்டத்தில், டாக்டர்கள், நர்ஸ், தூய்மைப் பணியாளர்கள், போலீஸாருடைய பங்குதான் அதிகம். ஊரடங்கைச் சரியாக கடைப்பிடிக்க வைக்க தினமும் சாலையில் நின்று போலீஸார் நமக்காகப் போராடுகிறார்கள் போலீஸ் வேலை பார்க்கும் நண்பர்களிடம் கேட்டபோது சாப்பாடு கிடைக்கும், ஆனால் சரியான நேரத்தில் கிடைக்காது என்றும், கிடைத்ததை சாப்பிடுவோம் என்றும் பிரியாணியை எல்லாம் பார்த்து நாட்கணக்கில் ஆகிவிட்டது என்றும் கூறினார்கள்.
இதனையடுத்து போலீஸாருக்கு பிரியாணி விருந்து வைக்க முடிவு செய்தோம். இதற்காக 200 பிரியாணி பொட்டலங்களைத் தயார் செய்து, நகர் ஸ்டேஷன், கணேஷ் நகர் ஸ்டேஷன், டிராஃபிக் போலீஸ் அலுவலகம் என போலீஸார் இருக்கும் இடங்களுக்கு நேரடியாகப் போய் பிரியாணி பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டிலையும் கொடுத்து வந்தோம். எல்லாரும் ரொம்பவே சந்தோஷமாக வாங்கி கொண்டார்கள். எங்களுக்கும் ரொம்பவே சந்தோஷம். தொடர்ந்து, நமக்காகப் போராடும் தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட அனைவருக்கும் எங்களால் முடிஞ்ச உதவிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம்’ என்று கூறினார். விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout