பைக் ஊர்வலம் சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த விஜய் ரசிகர்கள்: வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Friday,April 14 2023]

தளபதி விஜய்யின் ரசிகர்கள் பைக்கில் ஊர்வலமாக சென்று சட்ட மாமேதை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இன்று அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் அந்தந்த பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமையிடம் இருந்து உத்தரவு வந்ததாக கூறப்பட்டது.

அந்த வகையில் இன்று தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் இன்று ரசிகர்கள் மத்தியில் ஊர்வலமாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும் சட்ட மாமேதை அம்பேத்கர் வாழ்க என்ற கரகோஷமும் விஜய் ரசிகர்களால் எழுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் மக்கள் இயக்கம் எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அம்பேத்கர் பிறந்த நாளிலிருந்து தனது அரசியல் காயை விஜய் நகர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

More News

விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் வந்த பெண்ணுக்கு உதவி செய்த அஜித்.. கணவரின் நெகிழ்ச்சி பதிவு..!

விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் வந்த பெண்ணுக்கு நடிகர் அஜித் உதவி செய்தது குறித்து அந்த பெண்ணின் கணவர் நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

'பொன்னியின் செல்வன் 2':  ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி

குமரி-சென்னை 'விசில் போடு எக்ஸ்பிரஸ்'.. எல்லாமே இலவசம்: சிஎஸ்கே அறிவிப்பு..!

வரும் 30ஆம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியை நேரில் பார்க்க 750 பேர்களை இலவசமாக சென்னை அழைத்து வர சிஎஸ்கே

சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்.. டைட்டில் என்ன தெரியுமா?

நடிகர் சந்தானம் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

பிரதமர் மோடியை திடீரென சந்தித்த நடிகை ராதிகா.. என்ன காரணம்?

பிரதமர் மோடியை நேற்று டெல்லியில் நடிகை ராதிகா சரத்குமார் சந்தித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.