விஜய் பிறந்த நாளில் செய்ய வேண்டியதை நேற்றே செய்த ரசிகர்கள்: பொதுமக்கள் பாராட்டு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு ஆண்டும் விஜய் பிறந்த தினமான ஜூன் 22ஆம் தேதி செய்யும் செயலை நேற்றே ரசிகர்கள் செய்ததை அடுத்து பொதுமக்கள் விஜய் ரசிகர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அவரது ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் என்பதும் அன்றைய தினம் பல சமூக சேவைகள் செய்யப்படும் என்பது தெரிந்ததே. குறிப்பாக முதியோர் இல்லம் குழந்தைகள் இல்லத்தில் உள்ளவர்களுக்கு சிறப்பு உணவு விருந்தளிக்கும் ரசிகர் மன்றத்தினர் அன்றைய தினம் ரத்த தானம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் பகுதியில் அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் போதுமான அளவு ரத்தம் இல்லாததால் அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அவதி அடைந்ததாக தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த விஜய் ரசிகர் மன்றத்தினர் ஜூன் 22ஆம் தேதி செய்ய இருந்த ரத்த தானத்தை நேற்றே செய்தனர்.
நூற்றுக்கணக்கான விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் ரத்த தானம் செய்ய வரிசையில் நின்றனர் என்பதும் அதில் பிரசவத்துக்காக வந்திருந்த ஒரு பெண்ணின் அரிய வகை ரத்தமும் கிடைத்ததை அடுத்து அந்த பெண்ணுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் கூறினார். இதனை அடுத்து ரத்த தானம் செய்த விஜய் ரசிகர்களுக்கு அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தளபதி @actorvijay அவர்களின் உத்தரவின்படி,
— Thalapathy Vijay Makkal Iyakkham (@TVMIoffl) May 12, 2023
• #புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக,
இன்று காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சுமார் 100- க்கும் மேற்ப்பட்ட நிர்வாகிகள் இரத்த தானம்#ThalapathyVijayKuruthiyagam #LEO (1/3)
VC : @ThanthiTV pic.twitter.com/zvO3vHhcvb
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com