தடுப்பூசி போடும் முன் விஜய் ரசிகர்கள் செய்த தரமான சம்பவம்: குவியும் வாழ்த்துக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் தடுப்பூசி போடுவதற்கு முன் விஜய் ரசிகர்கள் செய்த தரமான சம்பவம் குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது
அந்த வகையில் சமீபத்தில் கோவையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்பாக இரத்ததானம் செய்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன
பொதுவாக விஜய் ரசிகர்கள் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் ஜூன் 22ஆம் தேதிதான் ரத்ததானம் செய்வது வழக்கம். ஆனால் தற்போது தடுப்பூசி போட்டுக் கொண்டால் அடுத்த 70 நாட்களுக்கு ரத்ததானம் செய்ய முடியாது என்பதால் அட்வான்ஸாக இப்பொழுதே அவர்கள் விஜய் பிறந்த நாளுக்காக இரத்ததானம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ரசிகர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன் செய்த இந்த தரமான சம்பவம் சமூகவலைத்தளங்களில் செய்தியாக வெளிவந்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே விஜய் ரசிகர்கள் சமீபத்தில் கொரோனா வைரசால் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு உதவும் வகையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொடுத்து உதவியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout