திடீர் என நடுரோட்டில் பரபரப்பை ஏற்படுத்திய விஜய் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் சிலர், திடீர் என விஜய்யின் பேனர் ஒன்றை வைத்து, பாலபிஷேகம் செய்து, கீழே விழுந்து கும்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அஜித் - விஜய் நண்பர்கள் என்றாலும், அவர்களுடைய ரசிகர்கள் சில சமயங்களில் ஏட்டிக்கு போட்டியாக செயல்படுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில், தல அஜித்தின் பிறந்த நாள்... 'மே' 1 ஆம் தேதி, அஜித் ரசிகர்களால் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் மட்டும் இன்றி, பிரபலங்கள் பலரும் தொடர்ந்து அஜித்துக்கு சமூகவலைதளத்தில் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், திடீர் என விஜய் ரசிகர்களுக்கு என்ன ஆனது என தெரியவில்லை? ஒருவேளை அடுத்த மாதம் வரும் விஜய்யின் பிறந்தநாளை அட்வான்சாக வரவேற்கும் விதத்தில், விஜய்யின் ரசிகர்கள் சிலர் அஜித் பிறந்தநாள் அன்றே.. நடுரோட்டிலேயே பால் அபிஷேகம், மற்றும் பேனர் முன் விழுந்து கும்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கடவுளே....விஜயே...
— கில்லி சுரேஷ் (@ghillisuresh_22) May 2, 2019
விஜயே..கடவுளே....
சாகும்வரை தளபதியாரின் காலடியில்...@actorvijay @EcrPSaravanan @udhaya_ganesh @ramk8060 @Vj_Praveen31 @vijaypuli22 @VijayFansTrends @Jahir2441 pic.twitter.com/GxhlYEPvvs
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Iniya Vaishnavi
Contact at support@indiaglitz.com