close
Choose your channels

'மாஸ்டர்' டிக்கெட்: கலெக்டரிடம் புகார் அளித்த விஜய் ரசிகர்களால் பரபரப்பு!

Tuesday, January 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் இந்த படத்தின் ரிலீசை கோடிக்கணக்கான விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என்பதற்காக விஜய் ரசிகர்கள் அதிக விலை கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கி வருவதாக கூறப்படுகிறது. 500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை ’மாஸ்டர்’ படத்தின் முதல் நாள் காட்சிகளுக்குரிய டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தின் டிக்கெட்டுகள் இடைத்தரகர் மூலமாக அதிக விலைக்கு விற்கப்படுவதாக விஜய் ரசிகர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிபந்தனை காரணமாக இரு மடங்கிற்கும் மேலாக ’மாஸ்டர்’ படத்தின் டிக்கெட்களை இடைத்தரகர்கள் மூலம் விற்கப்படுவதாக அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் விஜய் ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர். இதனால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் ரசிகர்களின் புகாரை அடுத்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment