close
Choose your channels

இயக்குனராக மாறிய விஜய் ரசிகர்

Thursday, February 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய்யின் பெயருக்கே ஒரு கிரேஸ் உண்டு என்பதை அவருடைய தந்தை எஸ்.ஏ.சி கூறியதை சற்று முன்னர் பார்த்தோம். விஜய் நடித்த படங்கள் மட்டுமின்றி விஜய்யின் பெயரை சொல்லி வரும் படங்கள் கூட பெரும் பரபரப்பை ஏற்படுத்தும். அந்த அளவுக்கு விஜய் என்ற ஒற்றை சொல், இளைஞர்களின் தாரக மந்திரமாக உள்ளது.


மூன்று விஜய் ரசிகர்களின் கதையை கொண்ட '3 ரசிகர்கள்' என்ற படம் உருவாகி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கோவையை சேர்ந்த விஜய் இளைஞர் மன்றத்தின் முன்னாள் நிர்வாகியான ஜான் விஜினா என்பவர் தற்போது இயக்குனராகியுள்ளார்.

இவர் இயக்கவுள்ள படம் ஒன்றில் ப்ளஸ் ஒன் படித்து வரும் மாணவர் ராகுல், விஜய் ரசிகராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஐஸ்வர்யா நாயகியாகவும் நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் பல விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் நடிக்கின்றனர். இவர்களுடன் பாக்யராஜ், பட்டிமன்றம் ராஜா உள்பட பலர் நடிக்கின்றனர். LHR பிலிம்ஸ் என்ற் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.