ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம்: விஜய் ரசிகர்கள் எடுத்த அதிரடி முடிவு!

  • IndiaGlitz, [Wednesday,January 23 2019]

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு இன்று இரண்டாவது நாளாக வேலைநிறுத்தத்தை செய்து வருவதால் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் ஆசிரியர்கள் இன்றி அவதியில் உள்ளனர்.

இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் ஒன்றான திருப்பூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் விஜய் ரசிகர்களின் முயற்சியால் 2 ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த ஆசிரியர்களால் அந்த பள்ளி மாணவர்கள் எந்தவித பிரச்சனையும் இன்று பாடம் படித்து வருகின்றனர். விஜய் ரசிகர்களின் இந்த அதிரடி முடிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் விஜய் ரசிகர்களின் இந்த செய்கைக்கு சமூக வலைத்தள பயனாளி ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் தங்கள் வாழ்வாதாரப் பிரச்சினைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் சூழலில் அந்தப் போராட்டத்தைக் கேலி செய்யும் நோக்குடனோ அல்லது அதன் பாதிப்பைக் குறைக்கும் நோக்குடனோ இது போன்ற செயலில் ஈடுபடுவது விஜய் ரசிகர்களுக்கு அழகல்ல. விஜய்யும் திரைப்பட வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளார்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

More News

மீண்டும் சாதனைகளை தகர்க்க காத்திருக்கும் 'அடிச்சு தூக்கு'

'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கு மேலும், சென்னையில் மட்டும் ரூ.10 கோடிக்கும் மேலும் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது

ஆக்சன் காட்சி படப்பிடிப்பின்போது பிரபல நடிகை காயம்

விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், சிம்பு, தனுஷ் உள்பட பல பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்த ஹன்சிகா தற்போது நாயகிக்கு முக்கியத்துவம்

பிக்பாஸ் ஜனனியின் அடுத்த படம் குறித்த தகவல்

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் இரண்டாம் சீசனில் பார்வையாளர்களை கவர்ந்த போட்டியாளர்களில் ஒருவர் ஜனனி. இறுதிச்சுற்றுக்கு ஒரு வாரம் முன்பு வெளியேறி வெற்றியாளர்

ரஜினி மகளின் திருமண தேதி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான '2.0' திரைப்படமும் இந்த ஆண்டு வெளியான 'பேட்ட' திரைப்படமும் நல்ல வசூலை குவித்து

ஆர்ஜே பாலாஜியின் 'எல்.கே.ஜி' ரிலீஸ் தேதி

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய ஆர்ஜே பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் 'எல்.கே.ஜி'. அரசியல் நையாண்டி கதையம்சத்துடன்