நெல்சனிடம் திடீரென மன்னிப்பு கேட்ட விஜய் ரசிகர்கள்: காரணம் இதுதான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் விஜய் ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தை இயக்கிய நெல்சன் தனது வாழ்த்துக்களை விஜய்க்கு டுவிட்டர் மூலம் தெரிவித்த நிலையில் இந்த பதிவில் விஜய் ரசிகர்கள் நெல்சனிடம் மன்னிப்பு கேட்டு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய்யின் பிறந்தநாளை அடுத்து இன்று நெல்சன் தனது டுவிட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தில், ‘இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் அவர்களே! உங்களுடைய கனிவு, நம்பிக்கை, உத்வேகம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. என்னுடைய வாழ்க்கையில் நீங்கள் ஒரு நண்பனாகவும், சகோதரனாகவும், நலவிரும்பியாகவும் இருப்பதற்கு நன்றி’ என்று செய்திருந்தார்.
இந்த பதிவு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்ததை அடுத்து விஜய் ரசிகர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டு வருகின்றனர். ‘பீஸ்ட்’ படம் எதிர்பார்த்த வெற்றியை தராததால் கடந்த சில மாதங்களாக நெல்சனை கலாய்த்து வந்த விஜய் ரசிகர்கள், விஜய் மீது நெல்சன் வைத்திருக்கும் பாசத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டு அவரிடம் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் நெல்சன் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’ஜெயிலர்’ என்ற படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை வெற்றி படமாக்கி அவர் மீண்டும் திரையுலகில் ஒரு வெற்றி இயக்குனராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Happiest birthday dearest Thalapathy @actorvijay sir❤️ your humbleness, confidence ,consistency,charisma continues to amaze me .. Thanksss for being a friend , a brother and a well wisher for life ❤️?? always cool as a cucumbaaa ?? love you sir ❤️ #HBDThalapathyVijay
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) June 22, 2022
Sorry Nelsa???? pic.twitter.com/qktqYhQYGA
— Thalapathy Gautham (@Gautham41) June 22, 2022
— Siv_ (@Offl_Siva) June 22, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com