திருட்டு டிவிடிக்கு எதிரான நடவடிக்கைகளில் விஜய் ரசிகர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவை தற்போது பயமுறித்தி கொண்டிருக்கும் ஒரே விஷயம் திருட்டு டிவிடி பிரச்சனைதான். முன்பெல்லாம் படம் வெளியாகி ஒருநாள் அல்லது இரண்டு நாள் கழித்து திருட்டு டிவிடிக்கள் வெளிவந்தது. ஆனால் தற்போது படம் வெளிவந்த சில மணி நேரங்களில், சிலசமயம் படம் வெளிவருவதற்கு முன்பே வெளிவந்து தயாரிப்பாளர்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் வெளிவந்து 25 நாட்களை கடந்து இன்னும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் 'தெறி' திரைப்படம் தனியார் பேருந்து ஒன்றில் ஒளிபரப்பாகியுள்ளது. அந்த பேருந்தில் பயணம் செய்த விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்து அந்த தகவலின் அடிப்படையில் அந்த பேருந்தை காவல்துறையினர் வளைத்து பிடித்து அதில் இருந்த 'தெறி' படத்தின் திருட்டு டிவிடியை கைப்பற்றியுள்ளனர்.
இதுகுறித்து பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. திருட்டு டிவிடியை ஒழிக்க விஜய் ரசிகர்கள் போல அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் முன்வந்தால் இந்த பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout