திருட்டு டிவிடிக்கு எதிரான நடவடிக்கைகளில் விஜய் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Friday,May 13 2016]

தமிழ் சினிமாவை தற்போது பயமுறித்தி கொண்டிருக்கும் ஒரே விஷயம் திருட்டு டிவிடி பிரச்சனைதான். முன்பெல்லாம் படம் வெளியாகி ஒருநாள் அல்லது இரண்டு நாள் கழித்து திருட்டு டிவிடிக்கள் வெளிவந்தது. ஆனால் தற்போது படம் வெளிவந்த சில மணி நேரங்களில், சிலசமயம் படம் வெளிவருவதற்கு முன்பே வெளிவந்து தயாரிப்பாளர்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் வெளிவந்து 25 நாட்களை கடந்து இன்னும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் 'தெறி' திரைப்படம் தனியார் பேருந்து ஒன்றில் ஒளிபரப்பாகியுள்ளது. அந்த பேருந்தில் பயணம் செய்த விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்து அந்த தகவலின் அடிப்படையில் அந்த பேருந்தை காவல்துறையினர் வளைத்து பிடித்து அதில் இருந்த 'தெறி' படத்தின் திருட்டு டிவிடியை கைப்பற்றியுள்ளனர்.

இதுகுறித்து பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. திருட்டு டிவிடியை ஒழிக்க விஜய் ரசிகர்கள் போல அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் முன்வந்தால் இந்த பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அஜித் பட திரைக்கதை ஆசிரியருடன் ரஜினிகாந்த் சந்திப்பு

'வேதாளம்' படத்தை அடுத்து தல அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார் என்பது தெரிந்ததே...

'விஜய் 60'- குறித்து கீர்த்தி சுரேஷ்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் உலகம் முழுவதும் தெறியாக வசூல் செய்து சாதனை புரிந்துள்ள நிலையில் அவரது அடுத்த படமான 'விஜய் 60'...

மீண்டும் இணைகிறது 'சந்திரமுகி' கூட்டணி?

இயக்குனர் பி.வாசு கன்னடத்தில் இயக்கிய 'ஷிவலிங்கா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். கன்னட சூப்பர் ஸ்டார் ஷிவராஜ்குமார்,...

'கபாலி' டீசர் செய்த மற்றொரு சாதனை

கடந்த 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' டீசர் இணையதளத்தில் பெரும்புயலை கிளப்பியதோடு இந்திய அளவிலும், உலக அளவிலும் பல சாதனைகளை புரிந்தது என்பதை பார்த்தோம். இந்நிலையில் தற்போது இந்த டீசரின் மேலும் ஒரு சாதனை குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்திய அளவில் இதுவரை அதிக பார்வையாளர்கள் ப

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 31வது ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெறவுள்ளது....