'மாஸ்டர்' நடிகரை மிரட்டிய விஜய் ரசிகர்: டுவிட்டரில் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய், அஜித், சூர்யா போன்ற மாஸ் நடிகர்களின் படங்களை தயாரிப்பவர்களுக்கு தயாரிப்பு பணி ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் அந்த படங்கள் குறித்து அப்டேட்டை ரசிகர்களுக்கு அவ்வப்போது கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் ரசிகர்களின் அன்புத்தொல்லைக்கு ஆளாக நேரிடும். தொடர்ச்சியாக அப்டேட் வராவிட்டால் மாஸ் நடிகர்களின் ரசிகர்கள் தயாரிப்பு தரப்பை விடாமல் தொந்தரவு செய்து கொண்டிருப்பார்கள் என்பது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாகி வருகிறது
இந்த நிலையில் தற்போது புதுமையாக விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தில் அப்டேட் கேட்டு ரசிகர்கள் மிரட்டவே தொடங்கிவிட்டார்கள். ‘மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சாந்தனுவை கடந்த சில நாட்களாகவே அப்டேட் கேட்டு விஜய் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது உச்சகட்டமாக ஒரு விஜய் ரசிகர் நடிகர் சாந்தனுவை மிரட்டும் வகையில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துவிடுகிறார்
’மாஸ்டர்’ படத்தின் அப்டேட் கொடுக்காவிட்டால் நான் அன்ஃபாலோ செய்து விடுவேன் என்று சாந்தனுவுக்கு அவர் மிரட்டியுள்ளார். இதனை சாந்தனு ஸ்போர்ட்டிவ்வாக எடுத்து கொண்டு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் ’மாஸ்டர்’ அப்டேட்டுக்காக விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர் என்பது மட்டும் உண்மை
Anna Update Eppo Varum Nu Sollunga Illana UnFollow Pannuven !! ??#Master @actorvijay https://t.co/NKOlvQ5o43
— ✝ChristeN JoshvA✝ (@ChristenJoshva) February 26, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments