அதிமுகவுக்கு எதிராக தனியாக களமிறங்கிய விஜய் ரசிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
வரும் மக்களவை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் விஜய் ரசிகை ஒருவர் அதிமுகவுக்கு எதிராக தனியாக களமிறங்கியுள்ளார்.
'சர்கார்' படத்தின் ரிலீசின்போது விஜய் ரசிகர்களின் பேனர்களை அதிமுகவினர் அடித்து நொறுக்கியது தெரிந்ததே. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிரணித் தலைவி ஜெகதீஸ்வரி என்பவர் தனது வீட்டில் 'இது தளபதி ரசிகை வீடு. இங்கு அதிமுகவினர் ஓட்டு கேட்டு வரவேண்டாம்' என்று போர்டு வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறுகையில், 'நாங்கள் எங்கள் சொந்த காசில் வைத்த பேனர்களை அதிமுகவினர் கிழித்தனர். அதற்கு பதிலடி கொடுக்கவே இப்படி ஒரு போர்டு என் வீட்டில் வைத்துள்ளேன். இதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்திலும் பரப்பி வருகிறேன். விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. என்னுடைய எதிர்ப்பை தெரிவிக்கவே இந்த போர்டு. என்னுடைய இந்த முயற்சிக்கு விஜய் ரசிகர்கள் பலர் ஆதரவு தந்து கொண்டிருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com