பெருங்கூட்டத்தில் ஒரே ஒரு ரசிகரிடம் மட்டும் அருகில் சென்ற விஜய்.. என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் தற்போது ’கோட்’ படத்தின் படப்பிடிப்பிற்காக திருவனந்தபுரம் சென்றுள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்ததும் அவர் தன்னை பார்க்க காத்திருக்கும் ரசிகர்களை பார்த்து வருவதும் ரசிகர்களை நோக்கி கையசைப்பதுமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் குறிப்பாக நேற்று அவர் வேன் மீது ஏறி ரசிகர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம்.
இந்நிலையில் இன்று படப்பிடிப்பிற்கு அவர் சென்றபோது தன்னை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருப்பதை பார்த்த அவர் அவர்களை நோக்கி கையசைத்தார். அப்போது ஒரு ரசிகர் கூட்டத்தில் மாலையுடன் காத்திருக்கும் நிலையில் அந்த ரசிகரை பார்த்து நான் அருகே வருகிறேன் என்று சொன்ன விஜய், அவருடைய அருகில் சென்று அவர் கையாலே மாலையையும் போட்டுக் கொண்டார்.
தனக்காக மாலை வாங்கிக் கொண்டு வந்த ரசிகனை ஏமாற்றக்கூடாது என்பதற்காக அந்த கூட்டத்திலும் அவர் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி அந்த ரசிகரின் அருகில் சென்று விஜய் மாலை போட்டுக் கொண்டதை அடுத்து அந்த ரசிகர் மிகப்பெரிய மகிழ்ச்சி அடைந்தது அவருடைய முகத்திலேயே தெரிந்தது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்த இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
#ThalapathyVijay noticed the fans who brought him a garland, and he graciously approached them to accept it with love ❤️🥹 What a heartwarming moment!pic.twitter.com/lk4228hDaw
— KARTHIK DP (@dp_karthik) March 20, 2024
Full speech #ThalapathyVijay 🤩💥#TheGreatestOfAllTime @actorvijay pic.twitter.com/QezaZTVLsW
— Prince Edwin (@GhilliArun666) March 20, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com