நிவாரண பொருட்கள் வேண்டாம், செல்பி ஒன்றே போதும்.. விஜய்யை ஆச்சரியப்படுத்திய ரசிகை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் இன்று நெல்லை உட்பட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தன்னுடைய கையால் நிவாரண பொருட்களை வழங்கிய நிலையில் தனக்கு நிவாரண பொருட்கள் வேண்டாம், உங்களுடன் ஒரு செல்பி மட்டும் போதும் என்று ரசிகை ஒருவர் கூறியது அவரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் இதில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக இன்று நெல்லை சென்ற விஜய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னுடைய கையால் நிவாரண பொருட்களை வழங்கினார்.
அப்போது ஒரு ரசிகை, விஜய்யின் காலில் விழுந்து வணங்கிய பின்னர், விஜய் நிவாரண பொருட்களை கொடுக்க முயன்றார். அவர் உங்களுடன் செல்பி எடுக்க வேண்டும் என்று கூற உடனே நிவாரண பொருட்களை அருகில் வைத்து விட்டு செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார்.
செல்பி எடுத்தவுடன் அந்த ரசிகை கிளம்பிய போது நிவாரண பொருட்கள் வேண்டாமா? என்று விஜய் கேட்க , ‘வேண்டாம் உங்களுடன் செல்பி எடுத்தால் மட்டும் போதும்’ என்று கூறி கூற, ’சரி ஓகே போங்க’ என்று விஜய் கூறிய அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Ithu venamaa sari poo.. 😂😂
— Actor Vijay Universe (@ActorVijayUniv) December 30, 2023
#NellaiWelcomesTHALAPATHY pic.twitter.com/byEgt5exKv
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com