கண்பார்வை பறிபோகும் முன் விஜய்யை சந்தித்த நெகிழ்ச்சியான ரசிகர்
- IndiaGlitz, [Friday,June 03 2016]
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இளையதளபதி விஜய்யுடன் புகைப்படம் எடுத்து கொள்ள அனைவருமே விரும்புவார்கள். ஆனால் அது சாத்தியமில்லை என்றாலும் அவ்வப்போது தனது ரசிகர்களுடன் நேரம் கிடைக்கும்போதெல்லாம் விஜய் புகைப்படம் எடுத்து வருகிறார்.
இந்நிலையில் கேரளாவை சேர்ந்த ஜதின் என்ற விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவருக்கு கண் பார்வையில் கோளாறு ஏற்பட்டது. ஏற்கனவே ஒரு கண்ணில் பார்வையிழந்த அவர் இரண்டாவது கண்ணிலும் 70% பார்வையை இழந்துவிட்டார். விரைவில் அவருடைய பார்வை முற்றிலும் போய்விடும் நிலையில் தனது பார்வை பறிபோகும் முன்னர் விஜய்யை ஒருமுறை நேரில் சந்திக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இதை தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் தெரிந்து கொண்ட விஜய் உடனே ஜதினை சென்னைக்கு வரவழைத்து அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டார்.