சர்கார் விவகாரம்: அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன்

  • IndiaGlitz, [Saturday,December 22 2018]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சர்கார் திரைப்படம் ரிலீசுக்கு முன்னரும் ரிலீசுக்கு பின்னரும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது.

இந்த படத்தில் அரசு வழங்கும் இலவசங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறப்பட்டிருந்ததாக அதிமுகவினர் 'சர்கார்' படத்தின் போஸ்டர்கள், பேனர்களை சேதப்படுத்தினர். இதற்கு பதிலடி தரும் வகையில் விஜய் ரசிகர்களும் அரசுக்கும், அமைச்சர்களுக்கும், அதிமுகவினர்களுக்கும் மிரட்டல் விடுத்தனர்.

இந்த நிலையில் சர்கார் படவிவகாரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு வாட்ஸப் மூலம் மிரட்டல் விடுத்த விஜய் ரசிகர் லிங்கதுரை என்பவருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களுடன் மிரட்டல் வீடியோ வெளியிட்ட இரண்டு விஜய் ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நைட்கிளப்பில் சண்டை: நடிகை தன்ஷிகா காயம்

'கபாலி' பட நடிகை தன்ஷிகாவுக்கு படப்பிடிப்பின்போது காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

ஜிஎஸ்டி வரியில் மாற்றம்: குறையுமா தியேட்டர் கட்டணம்?

ஜிஎஸ்டி வரிவிதிப்பின் காரணமாக கடந்த ஆண்டு தியேட்டர் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. ரூ.120 வரை இருந்த டிக்கெட்டுக்கள் தற்போது ரூ.200 வரை விற்பனையாகி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போகிறேன். கமல் அறிவிப்பு

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும், எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதை விரைவில் அறிவிப்பேன் என்றும் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

தனுஷின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கிய 'மாரி 2' திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

கமல்ஹாசன் கட்சியில் இணைந்த பிரபல இயக்குனர்

கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியான 'மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். இந்த கட்சியில் திரையுலகில் உள்ள பிரபலங்கள் பலர் இணைவார்கள்