ஒரு விஜய் ரசிகையின் நெகிழ்ச்சியான பதிவு
- IndiaGlitz, [Wednesday,May 09 2018]
தளபதி விஜய் சமீபத்தில் சென்னையில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த சந்திப்பில் தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் வருகை தந்திருந்தனர். கேரளாவில் விஜய்க்கு தமிழகத்தை போலவே அதிக ரசிகர்கள் உண்டு என்பது தெரிந்ததே
இந்த நிலையில் கேரளாவில் இருந்து சென்னை வந்து விஜய்யை சந்தித்த ரசிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியாக செய்துள்ள பதிவு ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜெண்டில்மேன் நடிகரான விஜய்க்கு தான் எப்படி ரசிகனேன் என்பது குறித்து அவர் விரிவாக அதில் விளக்கியுள்ளார். விஜய்யை நேரில் சந்திக்க தான் பல நாட்கள் காத்திருந்ததாக அவரிடம் தெரிவித்தபோது, 'நமக்கான டிரெயின் வரும் வரை நாம் காத்திருந்துதான் ஆகவேண்டும் என்று சிரித்த முகத்துடன் கூறியதாகவும் தெரிவித்தார். அவரோடு நான் புகைப்படம் எடுக்க சென்றபோது சிரித்த முகத்துடன் வரவேற்று என் கையை பிடித்து 'ரொம்ப நன்றி என்று கூறியபோது நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை என்றும், அந்த பதிவில் அந்த ரசிகை குறிப்பிட்டுள்ளார்.