'வாரிசு' படத்தை பாராட்டிவிட்டு அதன்பின் மன்னிப்பு கேட்ட பெண்ணின் வீடியோ: இயக்குனர் கண்டனம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'வாரிசு’ படத்தை பாராட்டி விட்டு அதன் பின்னர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ள பெண் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தளபதி விஜய் நடித்த 'வாரிசு’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் இந்த படம் குறித்து தங்களது கருத்துக்களை விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பதும் இது குறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது தெரிந்ததை.
அந்த வகையில் 'வாரிசு’ படத்தை பார்த்த இஸ்லாமிய பெண் ஒருவர் விஜய்க்கு பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் வாரிசு விஜய் தான் என்றும் அவருக்கு எந்த பிரச்சனை வந்தாலும் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்றும் அவர் பேசியிருந்தார்.
இந்த நிலையில் திடீரென அவர் தனது சமூக வலைத்தளத்தில், ‘நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன், கடவுளிடம் மன்னிப்பு கேட்டு விட்டேன், உங்களிடமும் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவிற்கு ’மூடர்கூடம்’ இயக்குனர் நவீன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது: இஸ்லாமிய ஆண்கள் சினிமா பார்த்து மைக் பிடித்து பேசிவிட்டு மன்னிப்பு கேட்டதுண்டா? விஜய்காக நாங்க நிற்போம் என்று சொன்ன பெண்ணை, தனக்காக கூட நிறக முடியாத இடத்தில் வைத்திருக்கும் ஆணாதிக்கம் இஸ்லாமியர்களிடமிருந்து ஒழிய வேண்டும்.
இறைவன் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் எனில், பெண்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்? பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு எனும் இயற்கை உண்மையை ஆண்கள் உணர வேண்டும். இஸ்லாமிய பெண்கள் கல்வியோடு பகுத்தறிவும் ஆதிக்கத்தை எதிற்கும் போர்குணமும் பெற வேண்டும்.
இஸ்லாமிய ஆண்கள் சினிமா பார்த்து மைக் பிடித்து பேசிவிட்டு மன்னிப்பு கேட்டதுண்டா? விஜய்காக நாங்க நிற்போம் என்று சொன்ன பெண்ணை, தனக்கக கூட நிறக முடியாத இடத்தில் வைத்திருக்கும் ஆணாதிக்கம் இஸ்லாமியர்களிடமிருந்து ஒழிய வேண்டும்.
— DirectorNaveen (@NaveenFilmmaker) January 12, 2023
pic.twitter.com/sYofBTgv5Y
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments