விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய விஜய்யின் குடும்ப உறுப்பினர்.. வைரல் புகைப்படங்கள்!
- IndiaGlitz, [Tuesday,January 31 2023]
கேப்டன் விஜயகாந்தின் திருமணநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரை நேரில் சந்தித்து விஜய்யின் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக இருந்த விஜயகாந்த் அரசியலிலும் தனது முத்திரையை பதித்தார் என்பதும் அவர் கடந்த சில வருடங்களாக உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ஜனவரி 31ஆம் தேதி இன்று விஜயகாந்த் பிரேமலதாவின் 33வது திருமண நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து அவரது கட்சியினர், ரசிகர்கள் விஜயகாந்த் - பிரேமலதா தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜயகாந்தை வைத்து ‘சாட்சி’, ‘வெற்றி’, ‘செந்தூர பாண்டி’ உள்பட பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனரும் தளபதி விஜய்யின் தந்தைமான எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.