close
Choose your channels

10, 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுடன் சந்திப்பு.. விஜய் செய்த செலவு இத்தனை கோடியா?

Saturday, June 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுடன் விஜய் சந்திப்பு இன்று நடைபெறுகிறது. விஜய் இன்று சந்திப்புக்காக ஒரு சில கோடிகளை செலவு செய்துள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10, 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களை அழைத்து வரக்கூடிய செலவு, தங்க வைக்கும் செலவு மற்றும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை ஆகிய செலவுகளை விஜய் செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த விழா நடைபெறும் இடத்திற்கு வாடகை மட்டும் சுமார் 40 லட்சம் என்று கூறப்படுகிறது. மேலும் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுக்கான காலை உணவு, மதியம் பிரியாணி உணவு ஆகிய செலவுகள் சேர்த்து மொத்தம் விஜய் இந்த விழாவுக்காக 2 கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறப்படுகிறது.

தமிழ் திரை உலகில் ஒரு நடிகர் மாணவ மாணவிகளுக்காக ஒரு விழா எடுத்து கோடி கணக்கில் செலவு செய்வது என்பது இதுவே முதல் முறை என்று திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment