விஜய்-மாணவர்கள் விழா.. 90கி அரிசி, 1500 கி காய்கறிகள்.. தடபுடலாக தயாராகும் அறுசுவை விருந்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் இருந்து 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுக்கு விருந்து, சான்றிதழ் மற்றும் கல்வி உதவி தொகை அளிக்கும் விழா இன்று நடைபெறுகிறது.
இதற்காக தமிழகத்தில் இருந்து 1500 மாணவ மாணவிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களுடைய பெற்றோர் சேர்த்து மற்றும் 6000 பேருக்கு விருந்து தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது
இன்று அமாவாசை சனிக்கிழமை என்பதால் சைவ விருந்துக்கு மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 90 கிலோ அரிசி, 1500 கிலோ காய்கறி என மெகா சைவ விருந்து தயாராகி வருவதாகவும் அதிகாலை 3 மணியிலிருந்து உணவு தயாரிக்கும் பணி தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது
தயிர் பச்சடி, கதம்ப பருப்பு பொரியல், உருளை பட்டாணி வறுவல், சௌசௌ கூட்டு, காலிஃப்ளவர் பக்கோடா, எண்ணெய் கத்திரிக்காய் காரக்குழம்பு, முருங்கைக்காய் சாம்பார், தக்காளி ரசம் ,அப்பளம், மோர் என 15 வகையான உணவு பொருட்கள் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி ஒருவர் கூறினார்.
மேலும் தண்ணீர் பாட்டி, பிஸ்கட் உள்ளிட்ட ஸ்நாக்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் இந்த விழாவுக்கு வரும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் எந்தவித குறையும் இல்லாமல் செல்ல வேண்டும் என்பதே தளபதி விஜயின் உத்தரவு என்றும் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments