விஜய்-மாணவர்கள் விழா.. 90கி அரிசி, 1500 கி காய்கறிகள்.. தடபுடலாக தயாராகும் அறுசுவை விருந்து..!

  • IndiaGlitz, [Saturday,June 17 2023]

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் இருந்து 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுக்கு விருந்து, சான்றிதழ் மற்றும் கல்வி உதவி தொகை அளிக்கும் விழா இன்று நடைபெறுகிறது.

இதற்காக தமிழகத்தில் இருந்து 1500 மாணவ மாணவிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களுடைய பெற்றோர் சேர்த்து மற்றும் 6000 பேருக்கு விருந்து தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது

இன்று அமாவாசை சனிக்கிழமை என்பதால் சைவ விருந்துக்கு மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 90 கிலோ அரிசி, 1500 கிலோ காய்கறி என மெகா சைவ விருந்து தயாராகி வருவதாகவும் அதிகாலை 3 மணியிலிருந்து உணவு தயாரிக்கும் பணி தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது

தயிர் பச்சடி, கதம்ப பருப்பு பொரியல், உருளை பட்டாணி வறுவல், சௌசௌ கூட்டு, காலிஃப்ளவர் பக்கோடா, எண்ணெய் கத்திரிக்காய் காரக்குழம்பு, முருங்கைக்காய் சாம்பார், தக்காளி ரசம் ,அப்பளம், மோர் என 15 வகையான உணவு பொருட்கள் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி ஒருவர் கூறினார்.

மேலும் தண்ணீர் பாட்டி, பிஸ்கட் உள்ளிட்ட ஸ்நாக்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் இந்த விழாவுக்கு வரும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் எந்தவித குறையும் இல்லாமல் செல்ல வேண்டும் என்பதே தளபதி விஜயின் உத்தரவு என்றும் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.

More News

ரஜினியின் 'ஜெயிலர்' அடுத்தகட்ட பணி தொடக்கம்.. வைரல் புகைப்படம்..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட பணியை தொடங்கி உள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

10, 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுடன் சந்திப்பு.. விஜய் செய்த செலவு இத்தனை கோடியா?

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுடன் விஜய் சந்திப்பு இன்று நடைபெறுகிறது.

'எந்திரன்' கதை திருட்டு வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'எந்திரன்' படத்தின் கதை தன்னுடையது என ஆரூர் தமிழ்நாடன் என்பவர் தாக்கல் செய்த வழக்கின் அதிரடி உத்தரவு நேற்று

பலாத்காரம் செய்த குற்றவாளியுடன் சமரசத்திற்கு வாய்ப்பு இருக்கா? நீதிபதியே கேள்வி?

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் கர்ப்பத்தை கலைப்பதற்கு ஒப்புதல் கேட்டு அவரது பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில்

முதலில் வந்தது கோழியா? முட்டையா? மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

நம்மூரில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் காலம் காலமாக கேட்கப்பட்டு வரும் ஒரு முக்கிய கேள்வி, கோழியில் இருந்து முட்டை வந்ததா? அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்பதுதான்.