'கோட்' படத்தில் விஜய் தரும் இரட்டை விருந்து.. யுவன்ஷங்கர் ராஜா சூப்பர் அப்டேட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ திரைப்படத்தில் அவர் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளிக்க இருப்பதாக யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் அப்டேட் கொடுத்துள்ளதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
‘கோட்’ திரைப்படத்தில் தளபதி விஜய், தந்தை - மகன் என இரட்டை வேடத்தில் நடிப்பதே இரட்டை விருந்து என்று ரசிகர்கள் எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் ‘கோட்’ திரைப்படத்தில் அவர் இரண்டு பாடல்களை பாடி உள்ளதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தெரிவித்துள்ளார். இந்த அப்டேட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே தளபதி விஜய் தான் நடிக்கும் திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலை மட்டும் தான் பாடி வருகிறார் என்பதும் அவர் தனது இரண்டாவது படமான ’தேவா’ என்ற திரைப்படத்தில் மட்டும் அவர் மூன்று பாடல்களை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் விஜயகாந்த், சூர்யா நடித்த ’பெரியண்ணா’ என்ற திரைப்படத்தில் விஜய் 3 பாடல்களை பாடிய நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது தான் ஒரே படத்தில் அவர் இரண்டு பாடல்களை பாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே ‘கோட்’ திரைப்படத்திற்காக விஜய் பாடிய 'விசில் போடு’ என்ற பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் விரைவில் அவர் பாடியுள்ள இரண்டாவது பாடலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘கோட்’ திரைப்படத்தில் விஜய் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார் என்பது ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு இரட்டை விருந்து தான்.
விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
Update of the Day:
— KARTHIK DP (@dp_karthik) May 27, 2024
For the first time ever in recent years, #ThalapathyVijay has sung two singles in #TheGreatestOfAllTime! 💥👌🏻😍🔥pic.twitter.com/i5d6n0mYQz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments