விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் திடீர் ஆலோசனை! விஜய்யின் திட்டம் என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீரென ஆலோசனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து 150கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் பங்கேற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த ஆலோசனையில் பங்கேற்று உள்ளார். இந்த ஆலோசனைக்கு பின்னர் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் குதிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு சமூக சேவைகள் செய்யப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ரத்த தான மையம், விஜய் விழியகம், விஜய் பயிலகம், விஜய் மினி கிளினிக், விஜய் நூலகம் உட்பட பல நல்ல விஷயங்கள் பொது மக்களுக்கு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காகவே அவர் அடுத்தடுத்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout