விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் திடீர் ஆலோசனை! விஜய்யின் திட்டம் என்ன?

  • IndiaGlitz, [Thursday,January 25 2024]

விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீரென ஆலோசனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து 150கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் பங்கேற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த ஆலோசனையில் பங்கேற்று உள்ளார். இந்த ஆலோசனைக்கு பின்னர் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் குதிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு சமூக சேவைகள் செய்யப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ரத்த தான மையம், விஜய் விழியகம், விஜய் பயிலகம், விஜய் மினி கிளினிக், விஜய் நூலகம் உட்பட பல நல்ல விஷயங்கள் பொது மக்களுக்கு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காகவே அவர் அடுத்தடுத்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது

More News

ஜிவி பிரகாஷின் 'ரிபெல்' ரிலீஸ் தேதி இதுதான்: விரைவில் புரமோஷன் பணிகள்..!

ஜிவி பிரகாஷ் நடித்த 'ரிபெல்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகி விட்டதாக வெளியான

ஹரியின் 'ரத்னம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு..! தமிழ் புத்தாண்டு கும்பலில் இருந்து தப்பித்த விஷால்..!

இயக்குனர் ஹரி இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவான 'ரத்னம்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

கண்டதை எல்லாம் வைரல் ஆக்குறிங்க.. இதையும் வைரல் ஆக்குங்கள்: பிக்பாஸ் ரக்சிதா வேண்டுகோள்..!

 கண்டதை எல்லாம் வைரல் ஆக்கிக் கொண்டிருக்கும் நீங்கள் இதையும் வைரல் ஆக்குங்கள் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரக்சிதா மகாலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில்

'உளறி கொட்டும் மலேசிய மாமா.. முத்து சந்தேகம்.. சிறகடிக்க ஆசையில் அடுத்தடுத்து திருப்பங்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறுகிய காலத்திலேயே இந்த சீரியல் ஏராளமானோர் மனதை கவர்ந்து விட்டது

கமல்-எச்.வினோத் படம் டிராப்.. மறைமுகமாக அறிவித்த ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருந்த திரைப்படம் காலதாமதம் ஆனதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது கிட்டத்தட்ட அந்த படம் டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.