'மாஸ்டர்' படத்தில் விஜய் பேசிய 'தல' வசனம்: வைரலாகும் டெலிட்டட் காட்சி!

  • IndiaGlitz, [Sunday,February 07 2021]

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூலைக் குவித்தது என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி திரையரங்குகளில் வெளியான 16 நாட்களில் ஓடிடியிலும் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் 'மாஸ்டர்’ திரைப்படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ரன்னிங் டைம் என்பதால் இந்த படத்தின் பல காட்சிகள் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதனை அடுத்து தற்போது ஒரு சில டெலிட்டட் காட்சிகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

அதில் ஒன்று 'மாஸ்டர்’ படத்தில் தல தோனி குறித்து விஜய் பேசிய காட்சிகளின் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ’தோனி பிரஷர் ஆகும் நேரத்தில் கூலாக முடிவு எடுப்பதால் தான் நாம எல்லோருமே அவரை கேப்டன் கூல்ன்னு கூப்பிடுறோம்’ என்று விஜய் வசனம் பேசும் காட்சி உள்ளது.

தல தோனி குறித்து விஜய் பேசிய 'மாஸ்டர்’ படத்தின் இந்த டெலிட்டட் காட்சியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று தோனியின் மகள் ஷிவாவின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் தோனியின் மகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளித்த பிரபல நடிகைக்கு பாலியல் மிரட்டல்!

view-source:http://www.puthiyathalaimurai.com/newsview/92931/I-get-rape-threats-each-time-I-talk-about-farmers--protest--British-actress-Jameela

ரிஸ்க் எடுத்து படகில் உடற்பயிற்சி செய்யும் தமிழ் நடிகை: வைரல் வீடியோ!

சிவகார்த்திகேயன் நடித்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' 'ராஜதந்திரம்' 'சரவணன் இருக்க பயமேன்' 'மிஸ்டர் சந்திரமௌலி' உள்பட பல தமிழ் திரைப்படங்களிலும் தெலுங்கு ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ரெஜினா

'வல்லமை தாராயோ' சீரியல் நடிகர் திடீர் தற்கொலை: என்ன காரணம்?

சமீபத்தில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் பல சின்னத்திரை நடிகர்-நடிகைகள் மீளவில்லை.

பிகினி உடையில் கிளாமர் போஸ் கொடுத்த 'அவ்வை சண்முகி' குழந்தை நட்சத்திரம்: வைரல் புகைப்படங்கள்

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அவ்வை சண்முகி'. கமல்ஹாசன், மீனா நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

மோசடி புகார் கொடுத்தவர் மீதே குற்றஞ்சாட்டிய சன்னிலியோன்: கேரள போலீசார் அதிர்ச்சி!

பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன் மீது ஒருவர் மோசடி புகார் கொடுத்த நிலையில் அந்த புகாரை விசாரிக்க சென்ற காவல்துறையினர்களிடம் தன்மீது புகார் அளித்தவர் மீதே சன்னி லியோன் குற்றஞ்சாட்டியுள்ளது