ஊர் முழுக்க ஐஸ் க்ரீம் இலவசம்… ரசிகர்களுக்கு வித்தியாசமான ட்ரீட் கொடுத்த இளம் நடிகர்!

  • IndiaGlitz, [Tuesday,May 09 2023]

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருந்துவரும் நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது ‘லிகர்’ வெற்றியினால் இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்றுவிட்டார். இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிவரும் அவர் தனது ரசிகர்களுக்கு வித்தியாசமான ட்ரீட் ஒன்றை வழங்கியிருக்கிறார்.

நடிகர் விஜய் தேவரகொண்டா தனது ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அவரது ரசிகர்களுக்கு வித்தியாசமான பரிசுகளை அறிவித்து வருகிறார். கடந்த ஆண்டு 100 ரசிகர்களை தனது சொந்த செலவில் மணாலி பகுதிக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். இது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரமிப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த ஆண்டு பிறந்தநாளையொட்டி மற்றொரு வித்தயாசமான அறிவிப்பை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘குஷி’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் நான் இருக்கிறேன். அதனால் உங்களுடன் இணைந்து எனது பிறந்தநாளை கொண்டாட முடியவில்லை. அதேநேரத்தில் விஜய் தேவரகொண்டா பர்த்டே டிரெக் எனும் பெயரில் சென்னை, விசாகபட்டிணம், ஹைத்ராபாத், மும்பை, பூனே, டெல்லி, பெங்களூர் போன்ற பகுதிகளில் பல ஐஸ் க்ரீம் டிரெக்குகள் இயக்கப்படும். இந்த டிரெக்குகளை யார் பார்த்தாலும் எனது சார்பாக ஐஸ் க்ரீம்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் விஜய் தேவரகொண்டாவின் சொந்த ஆடை பிராண்டான ‘ரவுடிவேர்’ பிராண்டில் இன்று மட்டும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தனது பிறந்த நாளையொட்டி நடிகர் விஜய் தேவரகொண்டா மேற்கொண்ட இந்த முயற்சிக்கு பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வரவேற்பை அளித்து அவருக்குப் பாராட்டுகளைக் கூறிவருகின்றனர்.