பிறந்தநாள் கொண்டாடும் இளம் நடிகர் விஜய தேவரகொண்டா… நீங்கள் அறியாத 5 சீக்ரெட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு சினிமாவில் துள்ளலான நடிப்புடன் இளம் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா தனது 34 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கு சினிமாவில் காதல், காமெடி திரைப்படமான ‘நுவ்விலா’ எனும் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அதற்குப் பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தில் மிக திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் ரசிகர்களிடையே பிரத்யேக அடையாளம் பெற்ற இவர் தொடர்ந்து ‘கிதா கோவிந்தம்’, ‘நோட்டா’ என்று பல படங்களில் தனது தனிப்பட்ட நடிப்பை வெளிக்காட்டி வருகிறார்.
தற்போது நடிகை சமந்தாவுடன் இணைந்து ‘குஷி’ திரைப்படத்திலும் கௌதம் தின்னானூரியுடன் இணைந்து ‘VD12‘ போன்ற திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் 34 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு நடிகர் ராம் சரண், நடிகை சமந்தா, நடிகர் துல்கர் சல்மான் போன்ற பிரபலங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்து வரகின்றனர்.
தமிழ் ரசிகர்கள் ‘நோட்டா’ திரைப்படம் மூலமே நடிகர் விஜய் தேவரகொண்டாவை அறிந்துள்ளனர். இந்நிலையில் அவரைப் பற்றி சில சுவாரசியமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தந்தை தொலைக்காட்சி தொடரை இயக்கிய ஒரு இயக்குநர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. நடிப்பை தவிர இவர் ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். கிங் ஆஃஃப் தி ஹில் எண்டர்டெயின்மெண்ட் என்ற பெயரிலான இந்த நிறுவனத்தில் 2019 இல் ‘மீக்கு மட்டும் செப்தா’ எனும் திரைப்படமும் 2021 இல் ‘புஷ்பக விமானம்’ என்ற திரைப்படமும் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.
நடிப்பை தவிர வேறுசில துறைகளிலும் ஆர்வம் கொண்ட நடிகர் விஜய் தேவரகொண்டா இந்த ஆண்டு ஜனவரியில் ரூபே பிரைம் வாலிபால் லீக் ஆட்டத்தின்போது ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸ் வாலிபால் அணியை விலைக்கு வாங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் உலக அளவில் பிரபலமான ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள 2018 பிரபலங்கள் பட்டியல் 100 வரிசையில் 30 வயதுக்குட்பட்ட 30 பேரில் இவரும் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ‘ரவுடிவேர்’ எனும் பெயரில் பிராண்டட் ஆடை நிறுவனம் ஒன்றையும் வைத்துள்ளார்.
இவையெல்லாவற்றையும் விட 25 வயதாக இருந்தபோது விஜய் தேவரகொண்டாவின் வங்கி கணக்கில் வெறும் ரூ.500 மட்டுமே இருந்ததாம். இதைப்பார்த்த அவருடைய அப்பா 30 வயதிற்குள் எப்படியாவது செட்டில் ஆகிவிட வேண்டும். இளமையிலேயே முன்னேற்றத்தை அடைந்துவிட வேண்டும் என்று அறிவுரை கூறினாராம்.
ஆனால் அயராத உழைப்பையும் தீராத சினிமா தாகத்தையும் கொண்டுள்ள விஜய் தேவரகொண்டா 30 வயதிலேயே ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் பிரபலங்கள் பட்டியலில் இடம்பெற்று சாதித்துக் காட்டிவிட்டார். அவருக்கு வாழ்த்துகள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout