மைக் டைசனுடன் மோதும் தென்னிந்திய நடிகர்: வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய்தேவரகொண்டா ’லிகர்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது படக்குழுவினர் அமெரிக்காவில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் என்பதும் இந்த படப்பிடிப்பில் விஜய் தேவர்கொண்டா மற்றும் மைக்டைசன் மோதும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் மைக்டைசனுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை விஜய்தேவரகொண்டா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அதில், ‘இந்த மனிதர் எவ்வளவு அன்பானவர், ஒவ்வொரு நொடியும் நான் அவருடன் இருக்கும் நினைவுகளை சேமித்து வைக்கிறேன். அவருடன் பணிபுரிவது மிகச்சிறந்த வாய்ப்பு என்று கருதுகிறேன் என்று கூறியுள்ளார். விஜய் தேவரகொண்டாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments