எனக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருமணம் நடக்கிறது: விஜய் தேவரகொண்டா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனாவை காதலித்து வருவதாகவும் இருவரும் வரும் பிப்ரவரியில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நடிகை ராஷ்மிகா, ‘கீதா கோவிந்தம்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் இருவரும் இணைந்து நடித்த படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திரையில் பொருத்தமான ஜோடியாக இருந்த விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் சமீபத்தில் செய்தி வெளியாகின
இந்த நிலையில் இது குறித்து அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். நான் பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளவோ, அல்லது திருமணம் செய்து கொள்ளவோ இல்லை, ஊடகங்கள் தான் எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருமணம் செய்து வைக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த வதந்தியை நான் கேட்டு வருகிறேன். அவர்கள் என்னை கையோடு கைபிடித்து திருமணம் செய்து வைக்கும் முனைப்பில் இருக்கிறார்கள்
மேலும் பிப்ரவரி மாதம் நான் ராஷ்மிகாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக வரும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com