தமிழக அரசியல்வாதிகளை கலாய்த்த 'நோட்டா' நடிகர்

  • IndiaGlitz, [Wednesday,October 03 2018]

'அர்ஜூன் ரெட்டி' என்ற ஒரே படத்தின் மூலம் தமிழகம் உள்பட தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் நடித்த 'நோட்டா' திரைப்படம் வரும் 5ஆம் தேதி வெளியாகின்றது.

இந்த படம் அரசியல் படம் என்ற நிலையில் தமிழக அரசியல்வாதிகளை பேட்டி ஒன்றில் விஜய்தேவரகொண்டா கலாய்த்துள்ளார். ஒரு கட்சியின் தலைவர் ஹெலிகாப்டரில் செல்லும்போது அந்த கட்சியை சேர்ந்தவர்கள் ஹெலிகோப்டேரை நோக்கி கும்பிடுவதும் தரையில் விழுந்து வணங்குவதும் வேடிக்கையாக இருப்பதாக கூறினார். ஹெலிகாப்டரில் செல்பவருக்கு அது எப்படியும் தெரியபோவதில்லை என்று தெரிந்தும் அவர்கள் இவ்வாறு ஏன் செய்கிறார்கள் என்று தனக்கு புரியவில்லை என்று கூறினார்.

அதேபோல் தங்கள் அபிமான தலைவரின் புகைப்படத்தை சட்டைப்பையில் வைத்திருப்பதும் அந்த புகைப்படம் மற்றவர்களுக்கு தெரியும் வகையில் இருப்பதையும் நான கவனித்துள்ளேன். இந்த படத்த்ல் நாசர் ஒரு அரசியல்வாதியாக நடித்திருப்பார். அவருடைய அபிமானிகள் அவருடைய புகைப்படத்தை சட்டைப்பையில் வைத்திருப்பது போன்று ஒரு காட்சி உள்ளது என்றும் விஜய்தேவரகொண்டா கூறியுள்ளார்.

More News

ஊட்டி அருகே மாயமான 7 பேர் கதி என்ன? மாறுபட்ட தகவல்களால் பரபரப்பு

ஊட்டி அருகே சுற்றுலா சென்ற 7 பேர் திடீரென மாயமானதாக வெளிவந்த தகவல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

3 ஆண்டுகளுக்கு ஆசிரியரை தத்தெடுத்த பிரபல நடிகர்

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சமூக பிரச்சனைகள் குறித்த கருத்துக்களை பதிவு செய்வது மட்டுமின்றி

விஜய்யும் சிம்புவும் நினைப்பவர்கள் தான் ஆட்சியை பிடிக்க முடியும்: டி.ராஜேந்தர்

நேற்று நடைபெற்ற 'சர்கார்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அரசியல் சாயம் அதிகம் இருந்தது. விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று சிலர் நேரடியாகவும் சிலர் மறைமுகமாவும் கோரிக்கை வைத்தனர்.

விஜய்யை தளபதியாக திமுகவினர் ஏற்று கொள்வார்களா? உதயநிதி பதில்

நேற்று நடைபெற்ற 'சர்கார்' பாடல் வெளியீட்டு விழாவில் கிட்ட்டத்தட்ட அனைவருமே விஜய்யை தளபதி என்ற அடைமொழியுடன் தான் அழைத்தனர்.

பிக்பாஸ் வெற்றிக்கு பின் பிரபலத்தை சந்தித்த ரித்விகா

கடந்த ஞாயிறு அன்று முடிவடைந்த பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் யாருமே எதிர்பாராத வகையில் ரித்விகா டைட்டில் பட்டம் வென்றார்.