தேர்வுக்கு படிக்காமல் முத்தம் கொடுத்த மாணவி.. விஜய் தேவரகொண்டா கொடுத்த வாக்குறுதி..!

  • IndiaGlitz, [Monday,February 19 2024]

மாணவி ஒருவர் தனது சக தோழிக்கு முத்தம் கொடுத்த வீடியோவை பதிவு செய்து, ‘விஜய் தேவரகொண்டா இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்தால் தான் நாங்கள் தேர்வுக்கு படிப்போம் என்று பதிவு செய்ததை அடுத்து அந்த மாணவிக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ஒரு வாக்குறுதி அளித்துள்ளார்.

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய தேவரகொண்டாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பாக அவருக்கு பெண் ரசிகைகள் அதிகம் என்பது தெரிந்தது. விஜய் தேவரகொண்டாவை பார்ப்பதற்காக சின்ன சின்ன கிராமங்களில் இருந்து கூட ஹைதராபாத்துக்கு அவரை தேடி மாணவ மாணவிகள் வந்துள்ளனர் என்பதும் அவர்களுக்கெல்லாம் அவர் அறிவுரை கூறிய அனுப்பி உள்ளதாகவும் அவ்வபோது செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில் தேர்வுக்கு படிக்கும் மாணவி ஒருவர் தனது சக மாணவிக்கு முத்தம் கொடுத்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து, இந்த வீடியோவுக்கு விஜய் தேவரகொண்டா கமெண்ட் செய்தால் மட்டுமே நாங்கள் தேர்வுக்கு படிப்போம் என்றும் பதிவு செய்திருந்தார்.

இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்த விஜய் தேவரகொண்டா ’நீங்கள் நன்றாக படித்து தேர்வில் 90 சதவீதம் மதிப்பெண் எடுத்தால், நான் உங்களை நேரில் சந்திப்பேன்’ என்று வாக்குறுதி அளித்துள்ளார். விஜய் தேவர கொண்டாவின் இந்த பதிலுக்கு அவரது ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.